Tuesday, July 29, 2014

ISIS கைப்பற்றிய நகரங்களில் ஈட்டிய /பறித்துக்கொண்ட/கொள்ளை அடித்த/ மாமூல் வசூலித்த   ரொக்கம்,சொத்து விவரங்கள் :

       மொசுல் நகரத்தைக் கைப்பற்றிய ISIS (இப்போது இஸ்லாமிய காலிபேட்) இராக் அரசுக்கு சொந்தமான ஐந்து ஹெலிகாப்டர்களை தன வசம் எடுத்துக் கொண்டது.  போரில் வென்றவர் தோற்றவரின் உடைமைகளை எடுத்துக்கொள்ளும் வழக்கம்    நீண்ட காலமாக நடப்பது தான்.  குற்றமில்லை. அது போன்ற அரசு சொத்துக்கள் தவிர அவர்கள் கைப்பற்றியவை: அந்நாட்டு ரிசர்வ் வங்கியுள் புகுந்து 400 மில்லியன் டாலர்கள்; பிற வங்கிகளுக்குள்ளும் புகுந்து அவற்றின் அலமாரிகளைக் காலி செய்தது.  மொத்தம் 85 மில்லியன் டாலர்கள் கொள்ளை என்று இராக்கின் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  அங்கு நடந்து கொண்டிருக்கும் பெட் ரோ லியம் சுத்திகரிப்பு   ஆலை (பெட்ரோல் டீசல் தயாரிக்கும் நிலையம்) ஒன்றைக் கைப்பற்றியது.   சிமென்ட் தொழிற்சாலை ஒன்றையும் கைப்பற்றி உள்ளது. அந்த வழியாகப் போகும் லாரிகள் ஒவ்வொன்றும் 200 டாலர் கட்டவேண்டும் என்பது போன்ற வரி/மாமூல்.    தாம் இது போல் ஈட்டிய பணத்தைப் போட்டு வைக்க அது கொள்ளை அடித்து மூடிய வங்கியை மீண்டும் திறந்தது.                                                     

         சுன்னி முஸ்லிம் அல்லாதவர்கள் "மதம்  மாறு (அல்லது) ஜெசியா வரி கொடு (அல்லது) செத்துமடி (அல்லது) வெளியேறு" என்ற முழக்கத்தைக் கேட்டு பயந்து  இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக அங்கு உள்ள     கிறிஸ்துவர்கள் வெளியேறுகிறார்கள்.  அவர்களிடம் உள்ள பணத்தையும் உடைமைகளையும் பறித்துக்கொள்வதாக செய்தி தாள்கள் கூறுகின்றன.  

      இதற்கு முன்பு,  இது  போன்ற இயக்கங்கள் சவூதி போன்ற அரசுகளின் நிதி உதவியைப் பெற்றே  தொடர்ந்தன.  இந்த காலிபேட்  சொந்த மாக நிதி நிலையை வளர்த்துக் கொள்ள திட்டமிட்டு செயலாற்றுகிறது.     

       அவர்கள் காட்டியுள்ள  நீண்ட கால வரைபடத்தில்   அந்த காலிபேட்டுககுள்  இந்தியாவும் இடம் பெற்று உள்ளது.  மத்திய கிழக்கிலிருந்தும்  மேற்கிலிருந்தும் கொள்ளை அடிக்க இந்தியா வருவது  ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்து வருவது தானே.    அதனால் தானோ என்னவோ அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய விமர்சனம் இங்கு மீடியாவில் இல்லை.   ஜமாத்தில் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. பட்வா ஒன்றும் போட்டதாகத் தகவல் இல்லை. 

அவர்கள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.  


Thursday, July 24, 2014

முஸ்லிம்களில் படிப்பறிவு இந்துக்களை விட  அதிக சதவீதம்!


ஒன்பது மாநிலங்களிலும் நான்கு யூனியன் பிரதேசங்
களிலும் படிப்பறிவு  சதவீதம் இந்துக்களைவிட முஸ்லிம்
களில் அதிகம்  உள்ளது.    அதைவிட கிறிஸ்துவர்களில் 
அதிகம் உள்ளது
இந்தியாவின் பல மாநிலங்களிலும், யூனியன் பிரதே
சங்களிலும் எழுதப் படிக்கத்தெரிந்தவர் இந்துக்களை விட
அதிக  சதவீதத்தில் உள்ளனர்குறிப்பாக வளர்ச்சி பெற்ற
 மாநிலங்கள்:
 தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா,
குஜராத்,   முதலியன மற்றும் நடுத்தர மாநிலங்களான
 மத்திய பிரதேசம் ,சட்டிஸ்கார், ஒரிஸ்ஸா, மேலும்,
புதுச்சேரி, அந்தமான் நிகோபார்
 தியு, தமன் முதலிய யூனியன் பிரதேசங்களிலும்
முஸ்லிம்கள்,   கிறிஸ்துவர்கள் படிப்பறிவு அதிகம்

மாநியூ.பிர இந்துக்கள் முஸ்லிம்கள்  கிறிஸ்துவர்கள்

தமிழ் நாடு                   72.0                  82.9                              85.8

ஆந்திர பிரதேசம்       59.4                 68.00                            75.3
சட்டிஸ்கார்                    63.9                 82.5                              75.3
குஜராத்                             68.3                 73.5                               77.7
ஜார்கண்ட்                       54.6                 55.6                               67.7
கர்நாடகா                              65.6                70.1                              87.4
மத்திய பிரதேசம்        62.8                 70.3                              85.8
மஹாராஷ்டிரா            76.2                 78.1                             91.0
ஒரிஸ்ஸா                        63.3                 71.3                             54.9

 புதுச்சேரி                     80.3                      87.8                            87.3
அந்தமான்நி               81.7                      89.8                          77.0
தாத்ரா  ஹவேலி    56.5                     80.4                          88.2
தமன் டையு                   77                        80.3                           88.2

இந்தியா முழுவதும்  65.1                59.1                            80.3

முஸ்லிம் எண்ணிக்கை அதிகம் உள்ள நான்கு
மாநிலங்களில் முஸ்லிம்களை விட முஸ்லிம்களை
விட இந்துக்கள் அதிகம்  படிப்பறிவுபெற்று உள்ளனர்
ஆனால் அனைத்து மாநிலங்களிலும் கிறிஸ்துவர்கள்
மிக அதிகமாக் படிப்பறிவு உள்ளவர்களாக   
விளங்குகின்றனர்:

 அவற்றில்   முக்கியமானவை:

பீகார்                                 47.9                        42.0                     71.1
உத்தர பிரதேசம்        58.0                        47.8                     72.8
ஜம்மு காஷ்மீர்          71.2                         47.3                     74.8


ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் படிப்பில் பின்
 தங்கி இருக்கிறார்கள்; அவர்களில் படிப்பறிவு குறைவு
அதனால் தான் அவர்கள் பொருளாதா நிலையிலும்
பின் தங்கி உள்ளார்கள் என்று சொல்கிறார்கள்
அல்லது அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது;
முன்வர முடியாமல் தடுக்கப்படுகிறார்கள் என்று
பழிக்கிறார்கள்.   இரண்டும் தவறு.

மற்றும் ஒரு விவரம்: இந்தியாவில் முஸ்லிம் தவிர
அனைத்து சிறுபான்மை மதங்களிலும் இந்துக்களை விட
படிப்பறிவு அதிகம்.  :

இந்துக்கள்                                    65.09 %
முஸ்லிம்கள்                             59.13
கிறிஸ்துவர்கள்                        80.25
சீக்கியர்கள்                                  69.45
புத்த மதத்தினர்                         92.66
ஜைனர்கள்                                   94.08



முடிக்கும் முன் முக்கியமான விஷயம்: இது 2001
ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு  தரும் புள்ளி விவரங்கள்;
 2011 ஆண்டு புள்ளிவிவரங்கள் மதம் சார்ந்த தகவல்களை
அரசு இன்னும் வெளியிடவில்லைஇது வரை வெளியான
விவரங்களின் படி படிப்பறிவு பொதுவாக மிகவும் மேலாகி உள்ளது:

                                                               
1991         2001      2011
 இந்தியா  முழுவதும்        52.21        64.83      74.04%   

ஆனால் சில விவரங்களையும் சேர்த்துப் பார்த்தால் தான்
 உண்மையான நிலையை உணர முடியும்  அவை ஆண்
பெண்களில் படிப்பறிவு என்ன என்று தனித் தனியாகவும்,
படிப்பை எந்த வகுப்பு வரை         தொடர்கிறார்கள் என்றும்
பட்டதாரிகள் எவ்வளவு சதவீதம், பொறியியல் போன்ற
உயர் கல்வி எவ்வளவு சதவீதம் என்றும்
நோக்க வேண்டும்

அவை பின் வரும் பதிவுகளில்.





Wednesday, July 9, 2014



                                            பட்வா:: என் சொந்த அனுபவம்
                                            ======   =====================

ஒரு வங்கிக் கிளை முஸ்லிம் நபர்கள் பலருக்குக் கடன் வழங்கி வசூல் செய்து வந்தது. அதன் நிலை சராசரியானதே.  இது வட ஆற்காடு மாவட்டத்தைப் பற்றிய செய்தி ஆகும்.  ஒரு கடன் வசூல் ஆகாததால் அடமானம் வைத்த நிலத்தை விற்க வேண்டி வந்தது; நீதி மன்றம் அறிவிப்பு செய்தது. ஏலம் நடத்தவேண்டிய தினம் ஏலம் கேட்க எவரும் வரவில்லை.  அந்த சொத்து முஸ்லீம்கள் குடியிருப்பிற்கு மத்தியில் அமைந்து இருந்தது; முஸ்லீம்கள் தவிர வேறு யாரும் வாங்க தயாராக இருக்க மாட்டார்கள்; ஆனால் ஓரளவு சரியான விலை கொடுத்து வாங்க முஸ்லீம்கள் முன் வருவர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எவரும் வரவில்லை.  ஊரில் விசாரித்ததில், உள்ளூர் ஜமாத்தில்  விவாதம் நடந்ததாகவும், எவரும் வாங்க ஏலம் கேட்கக் கூடாது என்று பட்வா வெளியானதாகவும் கேள்வியுற்றோம்.

நான் அப்போது அந்த பிராந்திய அதிகாரி.  அந்த ஊரைச் சேர்ந்த முஸ்லீம் தொழில் அதிபர் ஒருவரை- அவர் ஊரிலும் பெரிய புள்ளி- சந்தித்தேன்.   பட்வா விஷயம் சொன்னேன். அவருக்கு அதிர்ச்சி.  விசாரிக்கிறேன் என்றார்.   மேலும் சொன்னேன்:  "நல்ல விதமாக கடன் கொடுத்து சிறு தொழில்கள், விவசாயம், வீட்டுக் கடன் கொடுத்து வருகிறோம். பலர் இதை நல்ல  விதமாக பயன் படுத்தி வருகின்றனர். ஆனால் கடன் வழங்கும் போது  சொத்து  அடமானம் என்பது போன்றவை வழக்கமான ஒன்று தான்.  ஒரு வேளை  கடன் திரும்பவில்லை என்றால்,  வங்கிக்கு வசூல் நடவடிக்கை எடுக்க இயலும் என்றால் தான் மேலும் கடன் கொடுப்போம்; இவ்வாறு பட்வா விடுத்து எங்கள் பணியில் தலையிட்டால் கடன் கொடுப்பதை நிறுத்தவேண்டிய கட்டாயம் வந்து விடும்.    மேலும் , ரிசர்வ் வங்கிக்கும் எழுதுவேன்;  இதற்கு பல விளைவுகள் ஏற்படலாம்" என்று சொன்னேன். அவர் நான் முடிந்ததை  செய்கிறேன்;கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என்று சொன்னார்.   நானும்,எங்கள் அலுவல்கள் தொடரும் என்று உறுதி சொன்னேன்.   மூன்று மாதம் கழித்து நீதிமன்றம் மீண்டும் ஏலத்துக்கு நாள் குறித்தது; அப்போது ஏலம் கேட்க நபர்கள் வந்தனர்.  கடனும் அடை பட்டுவிட்டது.

எங்கள் வங்கியின் நல்ல பணியும் அந்த ஊரில்  தொடர்ந்தது;    தொடர்கிறது.


Sunday, June 15, 2014

Thiratti.com: இணையத் திரட்டிகளில் "திரட்டி.காம்" பங்களிப்பு... தமிழ்ஓசை செய்தி



FRIDAY, JUNE 13, 2014

பயங்கரவாதம் : சென்ற ஆண்டில் நிகழ்வுகள் : ஒரு பார்வை

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

பயங்கரவாதம் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளனஇது போல் எத்தனை   எங்கே எப்போது என்று நாம் ஒரு நினைத்துப் பார்ப்பதில்லை.  கடந்த ஆண்டு முன்  பாதியில் நிகழ்ந்த  நிகழ்ச்சிகளை ஒரு சேர பார்ப்போமே என்று விக்கி அறிஞரிடம் கேட்டு வந்த விவரங்கள்:
ஜனவரி 2013 -- ஜூன் 2013

1. நிகழ்வுகள் எண்ணிக்கை   97 (உலகம்  முழுதும் )

2. நிகழ்வுகள் : துப்பாக்கி சூடுவெடிகுண்டுதற்கொலைவெடிகுண்டுகத்தி வீச்சுதுப்பாக்கிப் போர்கற் வெடிகுண்டு,கூட்டமாக வந்து தாக்குதல்,  ராக்கெட் வீச்சுபிணை கைது
3. இந்தியாவில் :  ஹைதராபாத் (21 பிப்), ஸ்ரீநகர் (13 மார்ச்),பெங்களூரு (16 ஏப்ரல்), சத்தீஸ்கர் (26 மே)
4. இஸ்லாமிய நாடுகளில் நிகழ்வுகள்இராக் (24), பாகிஸ்தான்(17), சிரியா (10), ஆப்கானிஸ்தான் (9), நைஜீரியா (9), அல்ஜீரியா,கென்யாலிப்யாமாலிசோமாலியா , ஏமன்
5. இதர  நாடுகளில் : அமெரிக்கா (யு எஸ்  ), இங்லாந்துதாய்லாந்துபிலிப்பைன்ஸ், (மூன்று), ரஷ்யா
முஸ்லீம் அல்லாத நாடுகளில் நடந்தவற்றை பற்றி இது வரைவெளியான     தகவல்கள்படி அவை இஸ்லாம் சம்பந்தப்படாதவை.
இந்தியாவின் நிகழ்வுகளில் சத்திஸ்கார் வெடிகுண்டு நக்சல்கள் தீவிரமாக   உள்ள பகுதி.  அவை தவிர பிறநிகழ்வுகள் எந்த மதத்தினரால்/இயக்கத்தால் நிகழ்த்தப்பட்டனஎன்று இது வரை துப்பு துலங்கவில்லைஅகவே அவைபற்றியும் நாம் அபிப்ராயம் சொல்லவில்லை.
நம்மை உறுத்துவது மொத்தம் நடந்த 97 நிகழ்வுகளில் 11 யாரென்று தெரியாது.  மீதி  எண்பத்தாறு இஸ்லாமியநாடுகளில் நிகழ்ந்தவை.  காரணங்கள் இது வரை பெரிதாக.வெளிவரவில்லை.  அரசியல்/சமூக/மதவாத காரணங்கள்எவை என்று தெரியாது.  97ல் 86    இஸ்லாமிய நாடுகளில்நிகழ்ந்தது ஏன்
 குர்ஆனில் குண்டு வெடிப்பு குறித்து இல்லைஎந்தவொரு ஹதீதுலும் இல்லை.   இஸ்லாமிய நாட்டிற்குள்ளேயே ஜிஹாத் நடக்க வாய்ப்புக்கள் குறைவுபெண்கள்  பள்ளிகள்ஆஸ்பத்திரி நோயாளிகள்,  பொது மக்கள்நடமாடும் கடைத் தெருக்கள்,  விளையாட்டு வீரர்கள்இவர்கள் ஜிஹாதில் எதிர் அணியில்  இருக்க வாய்ப்பு  இல்லை.  அவர்களை அழித்தால் தௌபா பாவ மன்னிப்புஉண்டு என்று குரான்   சொல்வதாகத் தெரியவில்லை. (ஜிஹாதின்போது  செய்யும் திருட்டுஅடி-குத்து,கொலைகள்,கொள்ளைகள்கற்பழிப்புகளுக்கு குரானில் பாவமன்னிப்பு   உண்டு என்று தெரிந்ததே).. 
அதாவது எனக்கு இரண்டு ஐயங்கள்: (1) இஸ்லாமுக்கும் குண்டு வெடிப்புக்கும் நெருக்கம்  ஏன்?  (2) பெண்கள் கல்வி கற்பதே இஸ்லாமுக்கு எதிரான ஜிஹாத் என்று   கருதப்படுகிறதா?  நோயாளிகள் மருத்துவ  மனையில்சேர்வதே ஜிஹாதா?        இவற்றிற்கு (இவர்களை கொன்றால் அல்லது  துன்ப படுத்தினால்  தௌபா   இருக்கிறது என்று ஒருகருத்து போராளிகளிடையே உள்ளதா?
குரான்ஹடீத்துகள் ஓதி உணர்ந்த அறிஞர்கள்  தயவு செய்துவிளக்குவார்களா?